கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனுக்கு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை
இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள். வசதி குறைந்தவர்களாக இருந்தால் சரியான மருத்துவத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த அளவிற்கு இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் மருத்துவம் ஆடம்பர பொருளாக இருந்தது சாதாரணமாக அடிப்படை பரிசோதனைகளை செய்வதற்கே அதிக செலவாகும்.
ஆனால் கொரோனா நோய் தொற்று வந்த பிறகு மாரடைப்பு மற்ரும் எய்ட்ஸ்போன்ற அதிக அபாயகரமான நோய்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது.
பொதுவாக கொரோனா சிகிச்சை என்பது ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்கு நடைபெறும். பொதுவார்டில் வைத்து சிகிச்சை பெறுகிறவருக்கு ஒரு நாளுக்கு சராசரியாக 11 ஆயிரம் ஆகலாம்.
15 நாட்களுக்கு கணக்கிட்டால் ரூ 1.65 லட்சம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐசியு பிரிவில் வைத்து சிகிச்சை பெற ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். இதனால் கிட்டதட்ட ஒரு நபருக்கு ஏழரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.
வசதிகள் மிகுந்த சில முதன்மையான தனியார் மருத்துவமனைகளில் இந்த செலவு இரட்டிப்பாக மாறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை
கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்ள வார்டுக்கு செல்பவர்கள் அனைவருக்குமே PPE எனப்படும் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற ஒரு உடை வழங்கப்படுகிறது. இந்த உடை போதுமான அளவில் இருப்பில் இருக்கிறது. இந்த உடை தேவையான தருணத்தில் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படி அணிவது, எப்படிக் கழற்றுவது, எப்படி அகற்றுவது என விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு இங்கு உள்ள சமையலறையிலேயே சமைக்கப்பட்ட மிகச் சிறப்பான உணவு அளிக்கப்படுகிறது என்றும் சீனாவைச் சேர்ந்த நோயாளிகள் இருந்தபோது, அவர்களுக்கு ஏற்றபடியான நூடுல்ஸ் போன்ற உணவுகள் வழங்லப்ப்டுகின்றன.
நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. "மருத்துவர்களும் டீனும் தொடர்ந்து பேசுகிறோம். நோயாளிகளைப் பொறுத்தவரை, 60 சதவீதம் பேருக்கு சாதாரணமான காய்ச்சல் 4-5 நாட்கள் இருக்கும். இந்த சிகிச்சை முழுக்க முழுக்க இலவசமாக அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story