தமிழகத்தில் தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிப்பு
தமிழகத்தில் தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தடை உத்தரவு காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றிய 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story