மாநில செய்திகள்

வேலூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு + "||" + One death in Vellore: Tamil Nadu Corona toll rises to 8

வேலூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

வேலூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
வேலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 4,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  69 பேரில் 63 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.  இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 19 பேர் வீடு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 64 வயது பெண் கொரோனா பாதிப்புக்கு பலியானதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் ஒடிசா செல்லும் சிறப்பு ரெயிலில் பயணம்
சேலத்திலிருந்து ஒடிசா சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியிலிருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்நிறுத்தம்
வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வேலூர் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்; பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுப்பு
வேலூர் அருகே தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக 18 நாட்களுக்கு பின்னர் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வருவாய்துறையினர், போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
4. வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா
சென்னையில் பணிபுரிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி திரண்ட டிரைவர்கள்
வேலூர் மாவட்டத்தில் ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் திரண்டனர். தனிநபர் இடைவெளியை பின்பற்றாததால் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.