சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக. நகர் மண்டலத்தில் 22 பேர், கோடம்பாக்கம் 19 பேர், அண்ணாநகர் 15 பேர் ,தண்டையார்பேட்டை 12, தேனாம்பேட்டை 11, வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர்- தலா 4 பெருங்குடி மண்டலத்தில் 5 பேர் உட்பட சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story