கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
கோவையில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
*சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 172 ஆக உள்ளது.
* கோவையில் இன்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
*செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல் பட்டு மாவட்டத்தில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக #COVID19 | #TNCoronaUpdatepic.twitter.com/tkqHAUvoZ5
— Thanthi TV (@ThanthiTV) April 10, 2020
Related Tags :
Next Story