ஸ்டாலின் குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது - முதலமைச்சர் பழனிசாமி


ஸ்டாலின் குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 11 April 2020 8:12 PM IST (Updated: 11 April 2020 8:12 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டாலின் குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “* கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுவது வருத்தமளிக்கிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இணையதளத்தில் ஒளிவுமறைவு இன்றி வெளியிடப்படுகிறது. ஸ்டாலின் குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது. ஸ்டாலின் கருத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னலமற்று பணியாற்றுவோர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


Next Story