மாநில செய்திகள்

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை + "||" + Govt should provide free food in Amma canteens: Dmk Leader Mk Stalin Urges Tn Govt

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.  

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர் பலருக்கு கொரோனா வந்திருப்பது மன வேதனை அளிக்கிறது அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும்.  பத்திரிகையாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கொரோனா சோதனை செய்யவேண்டும். 

செய்திகளை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.  சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு உடனே நிறுத்திவைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை திறந்து சுங்க கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மனிதநேயமற்ற செயல்.  ரேஷனில்  அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து,சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு- ஸ்டாலின்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து,சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்க- திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
மாணவர்கள் பள்ளி சென்று, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
திமுக தோழமை கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
4. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.
5. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...