தமிழகத்தில் ஊரடங்கு; தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவி அறிவிப்பு


தமிழகத்தில் ஊரடங்கு; தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 5:53 AM GMT (Updated: 25 April 2020 5:53 AM GMT)

தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, பொதுமக்களில் பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 1,770 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற 21,770 தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்.  இதற்காக ரூ.2.177 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story