தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு அவசர சட்டம்


தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு அவசர சட்டம்
x
தினத்தந்தி 27 April 2020 4:00 AM IST (Updated: 27 April 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசினால், அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டம், 1939, பிரிவு 74-ன்படி அபராதம் உள்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story