அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - மு.கஸ்டாலின் எதிர்ப்பு


அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - மு.கஸ்டாலின் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 April 2020 11:43 AM GMT (Updated: 28 April 2020 11:43 AM GMT)

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்று பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் ஒருநாள் ஊதியததை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் வழங்கியதாகவும், கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியற்றி வருவதகாவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கை அவர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க செய்யும் என்றும் கூறியுள்ளார். 

இதுபோன்ற நடவடிக்கை நிதி மேலாண்மை படுக்குழிக்குள் தள்ளப்பட்ட விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக்கமிஷன் பகிர்வு போன்ற நிதியை அழுத்தம் கொடுத்து உடனே பெற வேண்டும் என்றும் அதைவிடுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story