மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்


மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 29 April 2020 9:48 AM GMT (Updated: 29 April 2020 9:54 AM GMT)

மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது, தமிழக ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

ஜல்சக்தி துறையின்  நேரடி கட்டுப்பாட்டில், காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிட்ட  அரசிதழை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் , தவறும் பட்சத்தில், மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்று சேர்த்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story