கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு


கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு
x
தினத்தந்தி 30 April 2020 8:38 AM GMT (Updated: 2020-04-30T14:08:32+05:30)

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை முதல் அமைச்சர் பழனிசாமி அமைத்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை இந்த குழு கண்டறியும்.  பின்பு விரைவான அனுமதி, சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.  ஒரு மாதத்திற்குள் இந்த குழு முதல் அமைச்சருக்கு அறிக்கை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

Next Story