கொரோனா பரவாமல் தடுக்க பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை கொண்டு பரிசோதிக்கலாம் - விஜயகாந்த் யோசனை
கொரோனா பரவாமல் தடுக்க பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை கொண்டு பரிசோதிக்கலாம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் யோசனை கூறியுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் நோய்பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எனவே கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நமது பாரம்பரிய மருத்துவமான ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்றவற்றை நாம் நிச்சயமாக கவனத்தில் கொள்ளவேண்டும். டாக்டர் தணிகாச்சலம் போன்றவர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வரும்வேளையில், ‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்ற பழமொழிக்கேற்ப, இந்த காலகட்டத்தில் நாம் எதையும் அலட்சியமாக கருதாமல், ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களை அழைத்து கலந்தாலோசனை செய்து அவர்கள் கூறும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 15 நாட்களுக்கு சிகிச்சை அளித்து, நாம் பரிசோதிக்கலாம்.
அவ்வாறு செய்யும்போது, அதில் பலன்இருந்தால் அந்த சிகிச்சை முறையை தொடரலாம். நிச்சயம் நமது பாரம்பரிய சிகிச்சைகள் பலன்அளிக்கும் என நம்பிக்கை இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று நாம் அறியவந்துள்ளோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story