"மனம் மாறு அரசே" - கமல் டுவீட்


மனம் மாறு அரசே - கமல் டுவீட்
x
தினத்தந்தி 2 May 2020 12:35 PM IST (Updated: 2 May 2020 12:35 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், அதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், அதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ஊர் வேண்டுமானால் உயிருக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கலாம், ஆனால், கொரோனா அரசுக்கு அடங்காது என்று கூறியுள்ளார்.  

மக்கள் மனது வைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தன் டுவிட்டில் கூறியுள்ள கமல், மனம் மாறு அரசே, மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story