வண்டலூர், திருவான்மியூரில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு
வண்டலூர், திருவான்மியூரில் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்த வண்டலூர் மற்றும் திருவான்மியூரைச் சேர்ந்த இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில், கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வந்த வியாபாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அடையாறு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் காய்கறி சந்தையில், கடந்த வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் காய்கறி வாங்க அலைமோதிய நேரத்தில், இவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்துள்ளார்.
Related Tags :
Next Story