அத்தியாவசிய பொருட்களுக்கான பார்சல் ரெயில் கட்டணத்தை ‘ஆன்லைன்’ மூலமாக செலுத்தலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களுக்கான பார்சல் ரெயில் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
பார்சல் ரெயில் சேவைக்கான புதிய கட்டண முறையை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஊடரங்கு மற்றும் சமூக இடைவெளி காரணங்களை மையப்படுத்தும் விதமாக ரெயில்வே நிர்வாகம் இந்த எளிய முறையை அறிமுகப்படுத்துகிறது.
இதன்படி இனி அலுவலகத்திலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தபடியோ சேவை கட்டண தொகையை ‘ஆன்லைன்’ மூலமாக எளிதாக செலுத்தலாம்.பார்சல்கள் ஏற்றிச்செல்ல அனுமதி பெற்றதும் அதற்கான கட்டணதொகையை இணைய வழி வங்கி சேவை மூலமாக செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கட்டண தொகை ரெயில்வே நிர்வாகத்திற்கு செலுத்தியது உறுதிசெய்யப்பட்டவுடன், வாடிக்கையாளர்களின் பார்சல்கள் அந்தந்த இடத்துக்கு கொண்டு சேர்க்கப்படும். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் இந்த வசதி, பார்சல் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் வசதியாகும். மேலும் கூடுதல் விவரங்களை 9444282223, 8129316480, 9444385240 என்ற தொலைபேசி எண்களிலும், www.srcommercialmas.com என்ற இணைய தளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story