சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? - முதல்வர் பழனிசாமி விளக்கம்
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவது ஏன்? என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்
சென்னை,
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக அளவு காணப்படுகிறது. சென்னையில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுவது ஏன்? என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இன்று தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் பழனிசாமி கூறுகையில், “ அதிகமான மக்கள் நிறைந்த நகரம் என்பதால் சென்னையில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பொதுக்கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story