சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி; முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ


சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி; முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 6 May 2020 12:38 PM GMT (Updated: 6 May 2020 12:38 PM GMT)

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 4672 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுயக்கட்டுபாடுடன் இருந்தால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம். வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3700 பேர் சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்து உள்ளனர். 

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களை கண்காணிக்கவும் சோதனையிடவும் 14 பிரதான சாலைகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. கிராம சாலைகளில் கூடுதலாக 40 இடங்களில் காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story