ஆந்திராவில் விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி வேதனையும், துயரமும் அளிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிந்து பலியானோர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்ததாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story