தமிழகத்தில் மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 6 வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வரை கொரோனா பரவும் வேகம் கட்டுக்குள் இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மிகவும் வேகமாக பரவ தொடங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 1,806 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. கொரோனா வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப் படுகிறது. தமிழகத்தில் நேற்று 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 316 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு 37 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 31 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1547 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்புடன் 3,822 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story