தமிழகத்தில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக, சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 33 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 32 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story