கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழகத்தை சேர்ந்தவர் பலி
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த தமிழகத்தை சேர்ந்தவர் பலியானார்.
சென்னை
சென்னை தியாகராயநகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
டாக்டர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில், அவரும் பெருங்குடியை சேர்ந்த சிவனேசன் என்பவர் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
சிவனேசன், 27 வருடமாக சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக உத்தரகாண்ட் மாநிலத்தில் பணிபுரிந்து, சளி மருந்து உள்ளிட்ட மருந்துகள் தயாரிப்பு பிரிவில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சோதனை முயற்சியின்போது இருவரும் சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனை முயற்சியாக குடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் மயங்கிய சிவனேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து டாக்டர் ராஜ்குமாரிடம் தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story