ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் தமிழகத்தில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு உத்தரவு காலத்தில் மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனவே, அனைத்து டாஸ்மாக் கடைகளில், ஷட்டர்களும் இழுத்து மூடப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு வெல்டு செய்யப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கடைகளில் இருந்து எந்த திருட்டு முயற்சியும் நடக்காதபடி அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படாமல் இருக்க மாவட்ட மேலாளர்கள் தீவிரமாக கண்காணித்து இந்த விஷயத்தில், மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story