தமிழகம் முழுவதும், கொரோனாவால் தீயணைப்பு வீரர்கள் 24 பேர் பாதிப்பு - கிருமிநாசினி தெளிக்கும் போது தாக்கியது
தமிழகம் முழுவதும், கொரோனாவால் தீயணைப்பு வீரர்கள் 24 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 7 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 600 வீரர்கள் கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி செய்கிறார்கள்.
இதனால் அவர்களை கொரோனா தாக்கி விட்டது. தமிழகம் முழுவதும் 24 தீயணைப்பு வீரர்கள் கொரோனா தொற்றால் தாக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். நேற்று வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் 4 பேர் கொரோனாவில் சிக்கினார்கள்.
தீயணைப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார். அவருடன் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் இருந்தார்.
Related Tags :
Next Story