திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா உறுதி
திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. தமிழகத்தில் 6 ஆயிரத்து 9 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,605 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 42 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதேபோன்று சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலருக்கு தொற்று பரவியுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு சென்ற கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனைகளில் இது உறுதியானது.
அந்த வகையில், திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து திருவள்ளூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 44ல் இருந்து 110ஆக அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் 3வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story