தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
x
தினத்தந்தி 10 May 2020 12:07 PM IST (Updated: 10 May 2020 12:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

26.04.2020 அன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையில், ” இதை நாம் எப்போதும், என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டும். நான் மேலும் ஒருமுறை கூறுகிறேன். இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம். உங்கள் அனைவருக்கும் சிறப்பான உடல்நலம் வாய்க்கட்டும்” என்று கூறி தனது உரையை முடித்தார். எனவே, தமிழகத்தில் அனைத்து பள்ளிகள்  மீண்டும் திறக்கப்பட்டாலும் இந்த  இரண்டு மீட்டர் (கிரீஸ் நாட்டில் ஐந்து மீட்டர்)இடைவெளியைக் கட்டாயம் பின்தொடர வேண்டிய சூழல் உள்ளது.தற்போது, 40 மாணவர்கள்  கொண்ட வகுப்பறை 20 மாணவர்களை மட்டும் உட்கார வைக்க முடியும். எனவே, வகுப்பறையை அதிகரிப்பதா? இல்லை பல கட்டங்களாக (காலை 20, மாலை 20 ) மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதா? போன்ற  கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை யோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து  முதலமைச்சர் தலைமையிலான  உயர்மட்டக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பள்ளி பாட புத்தகங்கள் , நோட்டுகள் உள்ளிட்டவை அந்தந்த பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

Next Story