ஒரே நாளில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில், பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பணிபுரிந்து வரும் மருத்துவர்கள்,காவலர்கள் ,பத்திரிகையாளர்கள் என பரவி வருகிறது. அந்த வகையில், சென்னை அயனம்பாக்கம்,ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர் ஒருவருக்கு உறுதியாகி இருக்கிறது. இந்த 5 மருத்துவர்கள் உடன் தொடர்புடைய நபர்களின் பட்டியல் எடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story