அன்னையர் தினம்: மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் என் அன்னையிட்ட பிச்சை - அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்


அன்னையர் தினம்: மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் என் அன்னையிட்ட பிச்சை  - அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்
x
தினத்தந்தி 10 May 2020 5:19 PM IST (Updated: 10 May 2020 8:13 PM IST)
t-max-icont-min-icon

மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் என் அன்னையிட்ட பிச்சை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தனது அன்னைக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜெயக்குமாரும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

வணக்கம்.... அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். மூச்சு விடும் ஒவ்வொரு நொடியும் என் அன்னையிட்ட பிச்சையல்லவா இந்த உயிர்! ஆம் தனியார் அன்னையை வணங்க ஒரு தினம்

ஒரு வகையில் அதுவும் நல்லதுதான்.

அன்னை மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா! என்னை ஈன்றெடுத்த தெய்வத்தின் பெயர் ஜெயலட்சுமி. அன்பு மொழி மட்டுமே அறிந்தவர். ஆசை மொழி மட்டுமே உதித்தவர். கஷ்டங்கள் பட்டாலும் ஒரு நாளும் வெளிக்காட்டி கொள்ள நெஞ்சுரம் கொண்டவர். ஜெயக்குமார் என்ற பெயரிட்டு ஆளாக்கி அழகு பார்த்த பெற்ற தாய் என் தாய்.

அரசியலில் அடியெடுத்து வைக்க அச்சாரமாக இருந்தவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவரின்றி ஓரணுவும் அசைந்ததில்லை எனக்கு. அவர் சொல்லே வேதம். பார்வையோ அருள்.

வலிதாங்கி வலிதாங்கி வலிமையான பிறவியை பெற்றெடுத்தவர் அவர். இன்று என் மீது விழும் அடிகளை தாங்கும் வல்லமையை பெற்றுக் கொண்டதும் அவரிடத்தில்தான். பெற்ற அன்னையையும் நாம் வணங்கும் அன்னையையும் இந்த அன்னையர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன்.

மீண்டும் அன்னையர் தினத்தில் அன்னையர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story