தனியார் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் எவ்வளவு? - விவரத்தை சமர்ப்பிக்க கட்டண நிர்ணயக்குழு உத்தரவு


தனியார் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் எவ்வளவு? - விவரத்தை சமர்ப்பிக்க கட்டண நிர்ணயக்குழு உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2020 3:15 AM IST (Updated: 11 May 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை சமர்ப்பிக்க கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தனியார் சுயநிதி கல்லூரிகளில் 2017-18, 2018-19, 2019-20-ம் கல்வியாண்டுகளுக்கான கட்டண விகிதம் கடந்த 2017-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான கல்வி கட்டண விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தனியார் சுயநிதி கல்லூரிகளின் கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர், அனைத்து தனியார் சுயநிதி என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்கள் கல்லூரிகளில் அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு எந்தெந்த படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது குறித்த விவரத்தை வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கட்டண விகிதத்தை சமர்ப்பிக்காவிட்டால் கட்டணத்தை மாற்றி அமைக்க முடியாத சூழல் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story