சென்னையில் கொரோனா தொற்றுக்கு இருவர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,959 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். நேற்று வரை 47 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் ஒருவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த 67 வயதுடைய நபர் என்பதும், மற்றொருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த 64 வயது கொண்ட மூதாட்டி என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 30 ஆகவும், தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 49 ஆகவும் உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story