மன்மோகன் சிங் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் - மு.க.ஸ்டாலின்


மன்மோகன் சிங் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 May 2020 1:38 PM IST (Updated: 11 May 2020 1:38 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த, 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த, காங்கிரஸ் மூத்த தலைவர், மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், நேற்று இரவு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார். சாதாரண வார்டில்தான் உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அல்ல என டாக்டர்கள் கூறியிருந்தனர். சமீபத்தில் அவர் உட்கொண்ட மருந்து எதிர்வினையாற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அவர் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன். இது போன்ற ஒரு நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங்கின் சேவைகள் நம் நாட்டிற்கு தேவைப்படுகின்றன, அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் திரும்புவார் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story