தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 May 2020 7:32 PM IST (Updated: 12 May 2020 7:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது முதல் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிய முதல் செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்திலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போல் இந்த மாவட்டங்களும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டம் பட்டியலில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்து உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடங்கிய மார்ச் 7-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை 2 ஆயிரத்து 323 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  கடந்த 10 நாட்களில் 5 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டு 3 மடங்காக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  4882-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு 61 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story