சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4882 ஆக உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11,788 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2,66,687 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6,520 ஆக உள்ளது.
Related Tags :
Next Story