ஜூன் மாத இலவச ரேஷன் பொருள் - தமிழக அரசு ரூ.219 கோடி ஒதுக்கீடு
ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருள் வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை,
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 17-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 2-ந் தேதியன்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால், ஜூன் மாதத்துக்கும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக அரசுக்கு சிவில் சப்ளைஸ் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூன் மாதத்துக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்க ரூ.219.14 கோடி நிதி கூடுதலாக செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து இலவச ரேஷன் பொருட்களை ஜூன் மாதத்தில் வழங்குவதற்காக அந்தத் தொகையை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story