கொரோனா நிலை பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
கொரோனா நிலை பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் இன்று காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது? அதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது பற்றி முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், மக்களுக்கு சேர வேண்டிய நிவாரண உதவிகள் எந்த அளவில் மக்களை சென்று சேர்ந்துள்ளது? என்பது போன்ற விவரங்களை அவர் கேட்டறிகிறார். அதில் கிடைக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆலோசனை வழங்கி வருகிறார்.
அதேபோல் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கலந்துகொள்கின்றனர்.
Related Tags :
Next Story