மாநில செய்திகள்

கொரோனா தொற்றுக்கு வங்காளதேச நாட்டு முதியவர் சென்னையில் உயிரிழப்பு + "||" + Bangladeshi elderly person dies of coronavirus in Chennai

கொரோனா தொற்றுக்கு வங்காளதேச நாட்டு முதியவர் சென்னையில் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு வங்காளதேச நாட்டு முதியவர் சென்னையில் உயிரிழப்பு
கொரோனா தொற்று ஏற்பட்ட வங்காளதேச நாட்டை சேர்ந்த முதியவர் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் 8 ஆயிரத்து 2 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  2,051 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  53 பேர் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், வங்காளதேச நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியான நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு
சென்னையில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் உள்பட சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது.
2. தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா; கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை
கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.
5. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்தது.