கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது
கோவையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்ததை அடுத்து, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.
கோவை
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 146 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில், புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த ஒருவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை வரை கோவையில் 144 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர். ஒருவர் மட்டுமே கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அவரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் அம்மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளான அனைவரும் குணமடைந்துள்ளதால், கோவை மாவட்டம் கொரோனா தொற்றில்லாத மாவட்டங்களின் பட்டியலில் இணைந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story