வெளிநாடுகளில் வாழும் தமிழக தொழிலாளர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
வெளிநாடுகளில் வாழும் தமிழக தொழிலாளர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் கடும் அச்சத்தில் உரைந்துள்ளனர். தங்களை உடனடியாக தாயகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
இரண்டாம் கட்ட விமான சேவை அறிவிக்கப்பட்ட பிறகு குவைத் நாட்டில் வாழும் தமிழர்களிடம் காணொலி வாயிலாக பேசினேன். அவர்கள் அனைவருமே தங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என்றுதான் மன்றாடுகின்றனர்.
எனவே, வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களையும் தாயகத்திற்கு மீட்டு வர வசதியாக உடனடியாக சிறப்பு விமானங்களின் இயக்கத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடுமையான அழுத்தம் தரப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story