ஊரடங்கு தொடர முதல் அமைச்சரிடம் மருத்துவ குழு பரிந்துரை


ஊரடங்கு தொடர முதல் அமைச்சரிடம் மருத்துவ குழு பரிந்துரை
x
தினத்தந்தி 14 May 2020 1:38 PM IST (Updated: 14 May 2020 1:38 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை தொடர்வதற்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.  பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு முதல் அமைச்சர் பழனிசாமியை மருத்துவ குழு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.  இதன்பின்பு, மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்.  அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது.

பணியிடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட அனைவரும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஊரடங்கை 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை.  ஊரடங்கை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாக தளர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.  அதனால் ஊரடங்கு தொடரும் என கூறியுள்ளார்.  

கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதியானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.  கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது.  கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Next Story