கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? ஆராய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், கல்வித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளிப் போகியுள்ளன.
வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியும் நிகழாண்டு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story