ஜூன் 30-ந்தேதி வரை வாகனங்களுக்கான வரி செலுத்த கால நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


ஜூன் 30-ந்தேதி வரை வாகனங்களுக்கான வரி செலுத்த கால நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 15 May 2020 4:15 AM IST (Updated: 15 May 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

வாகனங்களுக்கான வரி செலுத்த ஜூன் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. 

இந்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய ஆண்டு வரி காலக்கெடுவான கடந்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி மற்றும் காலாண்டு வரி காலக்கெடுவான இன்று (மே-15) வரியினை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றி செலுத்த வருகிற ஜூன் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்து முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story