தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உடல்நல குறைவால் மரணம்


மொய்தீன் கான்
x
மொய்தீன் கான்
தினத்தந்தி 15 May 2020 8:26 AM IST (Updated: 15 May 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உடல்நல குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்து உள்ளார்.

சென்னை,

நெல்லை பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மொய்தீன் கான்.  தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 2006ம் ஆண்டு அக்கட்சியின் ஆட்சி காலத்தில் தமிழக முன்னாள் சுற்றுச்சூழல் மந்திரியாக பதவி வகித்தவர்.  இதே தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று சட்டசபைக்கு தேர்வானவர்.

இவரது மகன் காஜா பீர் முகமது (வயது 53).  சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவால் முகமது அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்து உள்ளார்.

Next Story