தமிழகத்தில் கொரோனா நிலவரம்: செங்கல்பட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா, நெல்லையில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் கொரோனா நிலவரம்: செங்கல்பட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா, நெல்லையில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 15 May 2020 11:57 AM IST (Updated: 15 May 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் செங்கல்பட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நெல்லையில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், செங்கல்பட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

* 895 பாதிப்புடன் கோடம்பாக்கம் 2வது இடத்திலும், 699 பேருடன் திரு.வி.க.நகர் 3ம் இடத்திலும் உள்ளது (1/2)


* தேனாம்பேட்டை- 608, அண்ணா நகர்- 468, வளசரவாக்கம்- 461

* தண்டையார்பேட்டை- 437, அடையாறு- 276, திருவொற்றியூர்- 127

* மாதவரம்-85, மணலி- 75, பெருங்குடி- 72, ஆலந்தூர்- 67, சோழிங்கநல்லூர்- 64 (2/2)

Next Story