10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு- சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,
மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்?- என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுதாரர் வாபஸ் பெற அனுமதி கோரியதை அடுத்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Related Tags :
Next Story