புதிய முறையில் 10- ஆம் வகுப்பு தேர்வு- ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள்
மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் விலகாத நிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளதால், மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது.
இந்த நிலையில், புதிய முறையில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடப்பாண்டு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் எனவும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்.பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story