டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்த 17 பேர் கைது
டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் உட்பட 17 நபர்களைக் கைது செய்யப்பட்டனர்.
சென்னை
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுபானம் வாங்க பல்வேறு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
கடலூரில் காலை 7 மணி முதலே மது வாங்க டாஸ்மாக் கடைகள் முன்பு ஆயிரக்கணக்கில் கூட்டம் குவிந்தது.
இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளில் குவியும் கூட்டத்தினை கட்டுப்படுத்தக் கடை ஒன்றிற்கு 550 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
மேலும் காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு 70 நபர்கள் என வரிசையாக மது வாங்க அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்து டோக்கன் இல்லதாவர்தளிடம், கள்ளத்தனமாக டாஸ்மாக் டோக்கனை 200 ரூபாய்க்குச் சிலர் விற்பனை செய்துள்ளனர்.
இதனையறிந்த, காவல் துறையினர் ஆய்வு செய்ததில், கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் உட்பட 17 நபர்களைக் கைது செய்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story