தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் மேலும் 477  பேருக்கு  கொரோனா தொற்று-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 16 May 2020 12:47 PM GMT (Updated: 16 May 2020 12:58 PM GMT)

தமிழகத்தை சேர்ந்த 384 பேருக்கும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 93-பேருக்கும் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக பரிசோதனை செய்வதன் மூலம் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக கண்டறிய முடிகிறது என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்திய அளவில் நேற்று நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில்  இன்று மேலும் 477-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தை சேர்ந்த 384 பேருக்கும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 93-பேருக்கும் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,585-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 3 உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்  இதுவரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 -ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3538 - ஆக உயர்ந்துள்ளது” என்றார்.


Next Story