தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி


தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 17 May 2020 3:09 PM IST (Updated: 17 May 2020 3:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில்,

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பொது முடக்கத்தில் எந்த தளர்வும் இல்லை.

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.

* தனியார், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும் வேன்களில் 7 பேரும் பயணிக்கலாம்.

* தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் செயல்படுவதற்கான தடை தொடரும்.

* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே வரும் 31-ம் தேதி வரை தொடரும்.


* தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பார்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள் போன்றவை இயங்குவதற்கான தடை தொடரும்

* சென்னை நீங்கலாக 100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம்.

* ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும்.

* 5 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய பணிகளுக்கு டாக்ஸி, வாடகை வாகனங்களுக்கு அனுமதி 

* 50% பணியாளர்களை 100% பணியாளர்களாக உயர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.

* 100 நாள் வேலைதிட்டத்தில் 100% பணியாளர்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது.

* வேளாண், வியாபாரம், மருத்துவம், போன்ற பணி நிமித்த பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

* 25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய பணிகளுக்கு டாக்ஸி, வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* அரசு பணிகளுக்காக பேருந்தில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

* தனியார் தொழிற்சாலை பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

* தஞ்சை, நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,நீலகிரி மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லைதூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரிம் தேனி, மதுரை, சிவகங்கையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Next Story