‘நீட்’ தேர்வை எதிர்த்து அறப்போராட்டம் தொடரவேண்டும் - கி.வீரமணி அறிக்கை
நீட் தேர்வை எதிர்த்து அறப்போராட்டம் தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது விஞ்ஞான அறிவோ, மற்ற பாடங்களைப்பற்றிய செறிவோ, துளியும் தேவையின்றி இந்த ‘நீட்’ தேர்வு அமைக்கப்பட்டுள்ளதால், இதன்மூலம் ‘திறமை’ பளிச்சிடுவதாக கூறுவது மின்மினியை மின்சாரம் என்று வர்ணிப்பது போன்ற ஒரு வகை மோசடியே ஆகும். 12 ஆண்டுகள் படித்த படிப்பு(பிளஸ்-2 வகுப்பு வரை) குப்பையில் தூக்கி எறியப்பட்டதுதான் தகுதி, திறமையா?.
‘நீட்’ தேர்வினை எதிர்த்து தமிழ்நாடுதான் குரல் கொடுக்கிறது என்றால், இப்போது ‘நீட்’ தேர்வின் கொடுமையும், புரட்டும் உலகுக்கே தெரிய தொடங்கிவிட்டது. நமது அறப்போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இந்த மோசடித்தனத்தை ஒழிக்க எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், எத்தனை வலிமைகளை கூட்டி வந்தாலும், நமது அறப்போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story