பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
சென்னை,
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 15-வது நாளாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரியை கடந்த மே 3 ஆம் தேதி தமிழக அரசு உயர்த்தியது.
பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28-ல் இருந்து , 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20 -ல் இருந்து , 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு, மே 4 -முதல் அமலுக்கு வந்தது. அதன்பிறகு தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
Related Tags :
Next Story